யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lingenfeld ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மராசா ஜெயராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதம் ஒன்று ஆகியும் மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!
நாட்கள் 31ச் கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணி போல் எம்மைக் காத்த
அன்புத் தெய்வமே ஆறிடுமோ
எங்கள் துயரம் விதித்ததோர் விதியதால்
விண்ணகம்
சென்றதைப்
பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே!
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிகிரியை 07-01-2026 புதன்கிழமை அன்று பி.ப 12.00 மணியளவில் Gemeindehaus Christuskirche Lingenfeld Humboldtstrasse 11, 67360 Lingenfeld எனும் இடத்தில் நடைபெறும். அனைவரும் குடும்ப சகிதம் வந்து மதிய போசனநிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்திக்கிறோம். கலாநிதி மோகன்ராஜன் வைத்திலிங்கம் குடும்பம். UK. பிள்ளையார் கோயிலடி