Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 JUL 1942
இறப்பு 11 NOV 2020
அமரர் தர்மாம்பாள் நவரத்தினம்
வயது 78
அமரர் தர்மாம்பாள் நவரத்தினம் 1942 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 58 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Brentford, Essex  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மாம்பாள் நவரத்தினம் அவர்கள் 11-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திய கலாநிதி எஸ் ஏ தர்மலிங்கம் சுந்தரவல்லி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

வைத்திய கலாநிதி எஸ் நவரத்தினம் அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்ற சர்வேஸ்வரன் நவரத்தினம் மற்றும் ஜனனி சிவகணேஷன், ஜெய கணேசன் நவரத்தினம் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

வாணி சர்வேஸ்வரன், சிவகணேஷன் சிவலோகநாதன், அகிலா ஜெயகணேக்ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற வைத்திய கலாநிதி தர்மவல்லி சத்தியமூர்த்தி மற்றும் வைத்திய கலாநிதி தர்மசோதி பாலராஜன், காலஞ்சென்ற வைத்திய கலாநிதி தர்மதேவி விக்னராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லவன் சர்வேஸ்வரன், கிரிஷா சாய் சிவகணேஷன், லோஜென் ஜெய கணேசன் ஆகியோரின் பிரியமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: Dr எஸ் நவரத்தினம்(கணவர்)

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 10 Dec, 2020