யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருபானந்தன் தர்மலோஜினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உங்கள் குரல் கேட்காது
ஓராண்டு ஆகிவிட்டன
அரவணைத்த உங்கள் பாசக் கைகள் எங்கே!!
அள்ளித் தந்த அந்த அமிர்த சுவைகள் எங்கே
முத்தமிட்ட உங்கள் மூச்சு எங்கே
முடிச்சு வைத்த பாசக் கதைகள் எங்கே
அம்மா நான் கண் திறந்த போது உங்கள்
திருமுகத்தை கண்டு சிரித்தோம் அன்று
உங்கள் கண்கள் திறக்க மறுத்த போது
என் வாழ்க்கையும் இருண்டு விட்டதம்மா
அம்மா அம்மா என்று அழைக்கின்றேன்
ஆதரிக்க யாருமில்லை
ஆயிரம் சொந்தங்கள் அருகினிலே இருந்தாலும்
அம்மா உங்களைப் போல் யார் வருவார்
அவணியிலே இருப்பிறவி அடைபவர்கள்
அகிலத்தின் உச்சியிலே அமர்ந்திடுவர்
அம்மா நீங்கள் நடந்த பாதையோரம் செல்கின்றேன்
வழியில்லை நடப்பதற்கு விழிநீர்கள் தான் சொரிகின்றன
விடையில்லை இவ்வுலகில் எனக்கம்மா
விடைதேடி எமைக்கார்த்த முருகனை வேண்டுகின்றேன்
ஆத்மா சாந்தியடைய அருள்வேண்டி
அமைதியாய் அருளிக்கின்றேன்
என்றும் உங்கள் அன்பு மகன் கிருசாந்தன்....
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.