Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 22 AUG 1949
இறப்பு 28 FEB 2024
அமரர் தர்மலிங்கம் தர்மஜெயசூரியர்
Rtd Customer Services Manager, Bank of Ceylon
வயது 74
அமரர் தர்மலிங்கம் தர்மஜெயசூரியர் 1949 - 2024 ஊரெழு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், அரச வீதி, உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தர்மஜெயசூரியர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!

கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 27-03-2024 புதன்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்தக்கரையிலும். வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 29.03.2024 வெள்ளிக்கிழமை மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடை பெறும் மதியபோசன நிகழ்வில் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
அரச வீதி,
உரும்பிராய்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.