

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஊரதீவு, லண்டன் Middx Northwood ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் நிரஞ்சன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள மகனே!
எங்களை தவிக்க விட்டு விட்டு
எங்கே சென்றீர்!
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் ஐந்து வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்
எம் அன்புச் செல்லம் நீ எமை
விட்டு பிரிந்து யுகமேயானாலும்
உன் பசுமையான நினைவுகள் ஏராளம்
எம் மனதை விட்டு அகலாது...
கண்மூடி விழிப்பதற்குள்
கனப் பொழிதில் நடந்தவைகள்
நிஜம் தனா என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ..!
நீ வான் உயரத்தில் தெயவத்தில் ஒன்றாகி
நின்று எமையெல்லாம் பார்த்திடுவாய்...!!!
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எம்முடன் பிறந்தவனே எமது அருமைச் சகோதரனே!
உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததையா...
அமைதியின் அடைக்கலமாய்... அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்... நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன எமது உடன்பிறப்பே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...
Happy Fathers Day Appa, I miss you so much Nitharsan