யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் மயில்மேலழகன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம் நாம் இங்கு!
இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!
உங்களை உருக்கி எமக்காக உயிர்
உள்ளவரை வாழ்ந்தீர்கள் எங்களை நினைத்து
எங்களுக்காய் இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்
என்றும் உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்..!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 01-08-2026 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் 10 avenue Jules ferry 93140 BONDY எனும் முகவரியில் நடைபெறும் அந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து பி.ப 01:30 மணியளவில் நடைபெறும் மதிய போசனம் நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
10 avenue Jules ferry
93140 BONDY
RIP