Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 JUN 1930
இறப்பு 15 NOV 2012
அமரர் தர்மலிங்கம் மனோன்மணி
வயது 82
அமரர் தர்மலிங்கம் மனோன்மணி 1930 - 2012 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவை 11ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் தூணை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் மனோன்மணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

நடமாடிய வீட்டில்
படமாகிப் போனவளே!
உம்மை எம் மன வீட்டில்
சுமந்து நிற்கின்றோம்!

பார்க்கும் இடங்களெல்லாம் உங்கள் புன்னகை
பூத்திருக்குதம்மா நீங்கள் எம்மோடு இருந்து
வாழ்ந்த காலங்களை நினைக்கையில்
எம் இதயங்கள் துடிக்க மறுக்குதம்மா

உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா

மனதோடு எமை சுமந்து
பிரிவோடு துயர் தந்து
ஆண்டுகள் பத்து ஆனாலும்
ஆறாது உந்தன் இழப்பின் துயர்
நெஞ்சை விட்டு நீங்காது
உந்தன் நினைவலைகள்.

உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்