யாழ். கரவெட்டி கரணவாய் மத்தி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மகுலசிங்கம் ஆறுமுகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், வெளிநாட்டிலிருந்து வந்து பங்கேற்று ஆறுதல் கூறியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 11:30 முதல் பி.ப 03:00 மணிவரை Sri Sathya Sai Baba Centre Of Scarborough, 5321 Finch Ave E, Scarborough, ON M1S 5W2, Canada எனும் முகவரியில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்