யாழ். கரவெட்டி கரணவாய் மத்தி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மகுலசிங்கம் ஆறுமுகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி- 09-12-2025
குடும்பத்தின் ஒளி விளக்காய்
குவலயத்தே மிளிர்ந்தீர்கள்
கூரறிவு கொண்டவராய்
எமையென்றும் வளர்த்தீர்கள்
அன்பு அப்பாவே நீங்கள் எமைப்பிரிந்து
ஆண்டு ஒன்றாகி விட்டது
ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்று அழைக்க
நீங்கள்
இப் பூவுலகில் இல்லை
ஆலமரமாய் நின்று
எம்மை அரவணைத்தீர்கள்
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்
உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம்
கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
என்றும் எம்நெஞ்சங்களில் நிறைந்து இருப்பீர்கள்
தெய்வத்தோடு தெய்வமாய் நின்று
உங்கள் செல்வங்களை காத்திருப்பீர்கள்
உங்கள் ஆத்மா சாந்திபெற
மலர் தூவி
வணங்குகின்றோம்...
ஒம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி!