Clicky

பிறப்பு 23 JUL 1953
இறப்பு 28 AUG 2021
அமரர் தாரிணி கதிர்காமநாதன் (சுதா)
வயது 68
அமரர் தாரிணி கதிர்காமநாதன் 1953 - 2021 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ரஞ்சன்-ரஜனி குடும்பம்,பிரான்ஸ் 04 SEP 2021 France

திருமதி தாரிணி கதிர்காமநாதன் (சுதா) ————————————————— அன்பும்,பண்பும் நிறைந்த உடன் பிறவாத அக்காவாக பாசம் பகிர்ந்த ஒளியே! ஓர் தாயாய் ஆளாகி இப்புவியில் பெருமை சேர்த்து இல்லறத்தில் இன்பமாய் வாழ்ந்து நல்லறத்தில் ஆண்டு பல கழிந்து இன்புற்று புலம் பெயர் தேசமதில் வாழும் காலமதில் இன்று இறைவனுக்கும் இனிபோதும் என்றாகிவிட்டதோ! விதியின் வினைப் பயனால் விண்ணுலகிற்கு சென்றுவிட்டீர்களோ! அன்பான பேச்சு பண்பான குணம் பாசமுடன் அரவணைக்கும் உயர்ந்த உள்ளம் கொண்ட அன்னை எனும் அன்பு அக்கா! காணாத கண்ணிற்குள் கரைந்து போன கற்பூரமே வாழ்நாளில் மறவாது வடிக்கிறேன் கண்ணீர்! மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும், அன்பான அக்கா உங்கள் நினைவுகள் எங்கள் இதயத்தில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை, பாசமான நினைவுகளை எம்மிடம் விட்டு சென்றீர், உங்கள் பிரிவால் துயரும் அனைத்து உறவுகளுக்கும் ஆறுதல் கூறுவதுடன்,உங்களின் ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல ஆண்டவனை பிராத்திக்கின்றேன். அக்கா உங்கள் ஆத்மா இறைவனின் பாதங்களில் சாந்திபெறும் ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!! கண்ணீருடன்...