யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தரன் பரராஜசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 23-03-2026
கணப்பொழுதும் எண்ணவில்லை - எம்
கலங்கரை விளக்கே .....நீங்கள்
இமைப்பொழுதில் எம்மை விட்டகல்வாயென.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழி நடத்திய – எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா…
நீங்கள் இல்லாத உலகம் என்றும் இருள் மயமானது,
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை?
உங்கள் பிரிவைத் தாங்குமா எங்கள் இதயம்?
உங்களை நினைக்கும் போது வரும் கண்ணீரை
நாங்கள் துடைத்தாலும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது
ஆண்டொன்று சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
எங்கள் அருகில் நீங்கள் இருப்பதை
நாங்கள் உணருகின்றோம் அப்பா!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஆண்டொன்று சென்றாலும் ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அறிவுரைகள்
அரவணைப்புக்கள் என்றும் எங்கள்
நெஞ்சங்களில் உயிர்வாழும்!
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க
முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே !
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
My deepest sympathies to you and your family.” “Please accept my sincere condolences for your loss