1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
23
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தனுசியா யசோதரன் அவர்களின்1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்னவளே என் இனியவளே!
உன்னோடு நான் வாழ்ந்த வாழ்க்கை
என் வாழ்வில் நான் இழந்த இந்த இழப்பை
இறைவன் என் வாழ்நாள் முழுவதும்
தாங்க முடியாமல் செய்துவிட்டான்!
தனி மரமாக விட்டு ஏன் அவசரமாக சென்றுவிட்டாய்
இவ்வளவு தான் நம் வாழ்க்கை என்று
காலம் நினைத்துவிட்டதா?
காலங்கள் உருண்டு போனாலும்
கண்முன்னே நிழலாகும்
உன் நினைவுகள்
ஒரு போதும் என்னை விட்டு அகலாது!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உன் நிழலின் நிஜத்தை தேடி
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்