யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Colindale ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கச்சிப்பிள்ளை செல்லத்துரை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை(இளைப்பாறிய பாடசாலை அதிபர்) அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அம்மா உன்னை போல் ஒரு
தெய்வம் எங்கேயும் நான் காணவில்லை!
அன்பிற்கில்லா உன்னைபோல்
தாயை நான் பார்க்கவில்லை!
தாயே நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உன்னையே நினைத்திருக்கும்!
நான் அழும்போது என்
கண்ணீர் துடைத்த உன் கரங்கள்
எங்கே அம்மா? இன்று
என் கண்களில் இவ்வளவு
கண்ணீர் வடிகிறதே! கொஞ்சம் என்
கண்ணீரை துடைத்துவிட்டு மீண்டும் உறங்குங்கள்!
என் வரவிற்காய் காத்திருக்கும்
உன் விழிகள் ஏன் இன்று உறங்குகிறது
உன் செவிகளுக்கு கேட்கவில்லையா?
என் தனிமையின் அழுகுரல்கள்
அம்மா அம்மா என்று!
கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உன் நினைவுகள்
என்றும் என் மனதை விட்டு கலையாது!
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
We are truly saddened by amma's demise and will never forget her kindness and cheerful speech. Our deepest sympathies go out to everyone in the family. May she rest in peace.