Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 09 DEC 1926
மறைவு 16 SEP 2020
அமரர் தங்கச்சிப்பிள்ளை செல்லத்துரை
வயது 93
அமரர் தங்கச்சிப்பிள்ளை செல்லத்துரை 1926 - 2020 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Colindale ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கச்சிப்பிள்ளை செல்லத்துரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை(இளைப்பாறிய பாடசாலை அதிபர்) அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

அன்பின் திருவுருவாய், பாசத்தின் உறைவிடமாய்
வாழ்வின் இலக்கணமாய், இறைஞாலத்தில் வாழ
 வழிவகுத்த எங்கள் தெய்வமாகிய அன்புத்தாயே
 உங்கள் பேரன்பிற்கு இணையேது அம்மா! 

ஈராண்டு காலம் இமைப்பொழுதில்
 போனதம்மா ஆயிரம் சொந்தங்கள்
 அணைத்திட இருந்தாலும் அன்னையே
 உன்னைப்போன்று அன்பு செய்ய
 யாரும் இல்லை அம்மா இவ்வுலகில்!

அம்மா எங்கள் உயிருடன் கலந்திட்ட
 உங்கள் உதிரம் எம் உடலில் உள்ளவரை
நீங்கள் எம் ஒவ்வொருவரின் உயிருக்குள்
 உயிராக வாழ்வீர்கள் எம்முடன் நாம்
இவ்வுலகில் உள்ளவரை!

மறுபிறவி என இருந்தால் மீண்டும்
 நாம் உங்கள் கருவறையில் புதிதாக
 உருவெடுத்து உங்கள் மடியில் நாம்
தவழ வேண்டும் அம்மா!

வானத்தின் நிலவாய் வையகத்தின்
தென்றலாய் எங்கள் இதயத்தில்
என்றென்றும் வாழும் உங்களுக்கு
 எங்களது நினைவஞ்சலிகள் அம்மா!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 19 Sep, 2020
நன்றி நவிலல் Thu, 15 Oct, 2020