யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம், நெதர்லாந்து Amsterdam, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனிக்கோடி வைத்தியநாதர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-03-2023
வையகத்தில் வாழ்வாங்கு
வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே ஐயா
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
கணவனாய், அப்பாவாய், அண்ணனாய்,
மாமனாய், தாத்தாவாய், பூட்டனாய், பெரியப்பாவாய்
பாசமே வேதமாய் எமை ஆட்கொண்டீர்கள்
அதனால் தானோ நித்தம் எம்
உள்ளத்தினுள்ளே வாழுமோர்
உன்னத தெய்வமாகிவிட்டீர்கள் ஐயா...
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆன்மாவின் சாந்திக்கு
எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகின்றோம்...!