Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 01 APR 1958
மறைவு 23 JAN 2026
திரு தணிகாசலம் சம்புலிங்கம்
வயது 67
திரு தணிகாசலம் சம்புலிங்கம் 1958 - 2026 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தணிகாசலம் சம்புலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் அன்பு தம்பியே தந்தையே!
நாட்கள் 31 ஆனதுவே...
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?

 நிழல் தந்து எமை வளர்த்து
 நிலைத்து மண்ணில் வாழ வைத்து
 உறுதியுடன் எம்மைக் காத்த உத்தமனே

 எங்கள் அன்புத் தெய்வமே!
 பூந்தோட்டத்தில் நல் மலராய் மலர்ந்து
 பலர் வாழ மணம் வீசிய தம்பியே

என்றும் அழியாத உம் பாசம்
எம்மை விட்டு அகலாது தந்தையே
 காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
 கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்

 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 27 Jan, 2026