 
                     
        வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கேஸ்வரன் ஜெய்குமரன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
மகனே கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உந்தன் முகம்
என்னாளும் உயிர் வாழும்
 மண் விட்டு மறைந்த நீ 
விண்ணோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
பல காலம் இருப்பாய்!
நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நாமிருந்தோம்  
காற்றொன்று வீசியதாய்
நினைவிருக்கிறது  
நீ கலைந்துபோன
 கணம் மட்டும்
நினைவில் இல்லையய்யா..!
உயிர் உருக்கும் அந்த கணப்பொழுதை  
நினைக்க மனம் மறுக்குதய்யா  
நீ இருந்த இடமெல்லாம்
நீ நடந்த சாலைகள் எல்லாம்
உன்னை நினைவு படுத்தும்  
நிமிடங்களில் நதிகளும் தோற்கின்றன...
மீட்டும் விரல்களை தொலைத்த
வீணைகளாய் நாமிங்கு..
கார் இருளில் கலைந்தவனே..! நீ எங்கே? 
காலங்கள் கடந்து போனாலும்
இன்னும் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
இன்றும் நீ - எம்மோடு  
வாழ்ந்து கொண்டே இருக்கின்றாய்  
என்றும் நீங்காத சோகம்
எம் நெஞ்சங்களோடு...
உடன்பிறப்பே எங்கள்
உயிர்ச் சகோதரனே!
எம்முடன் பிறந்தவனே
எமது அருமைச் சகோதரனே!
உன்னைத் தேடி எங்கள்
கண்கள் களைத்ததையா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
 உணர்வுடன் ஒன்றாகிப்போன
எமது உடன்பிறப்பே
உமது ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
                     
            