1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கவேல் சிவகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரே!! இனியவனே!
உனை இழந்தததில் முகவரி இழந்த காகிதமாய்
விழி இழந்த குருடராய் நாம் ஆனோம்
வேரிழந்த மரமாய் காடிழந்த விலங்காய்
நீரில்லா மீனாய் நெருப்பில் விழுந்த புழுவாய்
நாங்கள் இங்கே துடிக்கிறோமடா
எங்கள் வாழ்வுக்கு அர்த்தம் புகட்டியவனும் நீதான்
எங்கள் உயிருக்கு உணர்வு ஊட்டியவனும் நீதான்
நீ பேசிய வார்த்தைகள் போதுமடா
காலமும் கடந்து ஆண்டு ஒன்று ஆனது - ஆனாலும்
உன்கால் தடங்கள் மாறவில்லை
உன் பிரிவால் ஒவ்வொரு கணமும்
துடியாய் துடிக்கும் எம் இதயங்களில்
உன் நினைவுகள் எந்நாளும் வளர்பிறையே,
உன் ஆத்மா சாந்திக்காக
இறைவனிடம் வேண்டுகிறோம்.
தகவல்:
நண்பர்கள்