யாழ். பிறவுன் வீதி 5ம்லேனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கவேலு புவனேந்திரன் அவர்கள் 21-12-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தங்கவேலு பராசக்தி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், பரராஜசிங்கம் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்சினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
திவ்யா, சந்தியா, சஞ்சய் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சோமாவதி(பிரான்ஸ்), ஜெயவதி(ஜேர்மனி), ஜெயந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மலோஜினி(கனடா), பத்மலோலன்(இலங்கை), முரளிதரன்(பிரான்ஸ்), இளங்கோ(டோகா), குமுதினி(இலங்கை), கேசவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுதா, ஆஷா, பிரதீபா, ரீனா, சற்குணமூர்த்தி, ரூபகுமார், ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
செல்வநாயகம்(பாப்பாத்தி), ரவிச்சந்தர், அருந்தவமணி(அரசி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.