1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 JAN 1946
இறப்பு 15 JUN 2021
அமரர் தங்கத்துரை சுபமங்களதேவி
வயது 75
அமரர் தங்கத்துரை சுபமங்களதேவி 1946 - 2021 மூளாய், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், சங்கானை ஆஸ்பத்திரி வீதியை வதிவிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கத்துரை சுபமங்களதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 03-07-2022

ஓராயிரம் உறவுகள்
எமை சூழ இப்புவிதனில் ‘அம்மா’
உனையழைக்க நீயிலையேயென
ஏங்கிடுதே இருவிழிதனில்

ஓராண்டும் உருண்டோடியதோ
என வியக்குதே இப்பொழுதினில்- அம்மா
உன்குரலோசை தினம் தினம்
கேட்குதே எம் உளம்தனில்

ஓர் கூட்டுப்பறவைகளாக
எமை சேர்ப்போம் தாய்மடிதனில்- அம்மா
உன் நினைவுகள் என்றும் மறவோம்
எம் வாழ்நாள் உள்ளவரை.....

அம்மா உங்கள் ஆன்மா
இறைவனில் இளைப்பாறிட
அனுதினம் இரஞ்சுகின்றோம்...

உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்..    

தகவல்: குடும்பத்தினர்