6ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கராசா யோகேஸ்வரி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஆறு ஆனாலும் உம்
நினைவுகள் புரலாது எம் இதயத்தில்
அன்னை என்று நாம் அழைத்திட
யாருண்டு இவ்வுலகினில்
நம்மை விட்டு ஏன் பிரித்தான் இறைவன் உம்மை?
கண்ணை இமை போல்
காத்த எம் அன்னை காணவில்லை!
உன் விம்பம் எம் கண்ணில்
கண்ணுறங்கும் நேரத்தில் கனவினில்
உன் திருமுகம் காண்கையில்
கண் விழித்து தேடுகின்றோம்
உம் விம்பம் காணவில்லை!
கண்களில் வழிந்திடும் கண்ணீரை
துடைத்திட யாருண்டு அம்மா!
ஆறிரு கரங்கள் அரவணைக்க இருந்தாலும்
அம்மா உம் அன்புக்கரம் தேடி
அலைகின்றோம் நாம்
இன்று எம் அன்னை எமை
விட்டு விண்ணுலகம் சென்றாலும்
உம்மை என்றும் எண்ணியே
எம்முலகம் சுற்றும்!
இவ்வுலகம் உள்ளவரை....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்