மட்டக்களப்பு பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா உதயராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு காலம்தான் போனாலுமே
பல்லாண்டு காலங்கள்தான் வந்தாலுமே
ஆறாததே உங்களைப்பிரிந்த மனத்துயரமே !
ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
அழியாது எம் துயரம்
மறைந்து விடவில்லை நீங்கள்
எம் மனங்களில் மறையாது
என்றும் மனங்களில் வாழ்வீர்கள் ஐயா
கைலாயநாதர் ஆன்மிகம் எல்லாம் அது... அதுவே எல்லாம்... உண்மைப் பாதை நோக்கம் மானிட மேன்மை. ஒளி உலகம், வான உலகம், பூ உலகம், காலச்சுழற்சி, ஆத்ம ரகசியம், போகங்களையெல்லாம் அறிந்து அனுபவிக்கக் கூடிய மானிடனே!
ஆத்மாவான உயிர் உடலில் எங்கே உள்ளது? எப்படி உள்ளது? அதை உணரும் வழி என்ன? உயிர் உடம்பை உதிர்த்த நிலையில் அது எங்கே செல்கிறது? அழிவற்ற ஆத்மா எதனால் அழிகின்ற உடம்பைத் தேர்ந்தெடுக்கின்றது? உடல்தான் ஆத்மாவைத் தேர்வு செய்கிறதா? அல்லது ஆத்மாவாகிய உயிர்தான் உடலைத் தேர்வு செய்கிறதா? இவ்வுயிரின் நிர்வாகி யார்? என்ற பல கேள்விகளுக்கான விடையைக் கண்டறிந்தால் அதுவே ஆத்ம ரகசியமாகும்.
இது சொல்லித் தெரிவதில்லை; முயன்று தெரிந்துகொள்ள வேண்டும். ஆயிரம் ஆயிரம் உயிர்களைப் பிரம்மா சிருஷ்டித்தார். இவ்வுயிர்களில் மனிதனே விசேஷமானவன். அவன் ஒருவனுக்குத்தான் தன்னை அறியும் தன்மையோடு தான் சார்ந்த உலகை அறியும் அறிவும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிவால் புற உலகையே மனிதர்கள் காண்கின்றனர். புறத்தைப் போலவே அகத்தைக் காணும் முயற்சியை எவரும் செய்வதில்லை. அப்படிச் செய்யாத வரை உலக மாயை விடுவதில்லை. ஆன்மாவை உணர உலக மாயையை வெல்ல வேண்டும்.
அடுத்து, தன்னுள் அகநோக்கம் வேண்டும். அதுவே நன்மைக்கான பாதை. மற்றவை எல்லாமே அழிகின்ற இன்பத்திற்கான பாதையே. நன்மைக்கான பாதையைத் தேர்வு செய்தாலே ஆத்ம தத்துவத்தை நெருங்க முடியும்.
அதேசமயம் இந்த ஆத்மா அழிவற்றது. உடம்பை வழிபாடுகளினால் மட்டுமே அறிந்துவிட முடியாது. ஆத்மாவே உடலைத் தேர்வு செய்கின்றதாயின், கருவில் ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணிதமும் கருவுக்குள் மனிதப் பிண்டத்தையே உருவாக்குகின்றன. இதைத்தான் விஞ்ஞானம், ஆண் பெண் புணர்ச்சியின் போது பெண்ணின் முட்டையை ஆணின் விந்து கருவுறச் செய்தே யுகமம் (Zygote) உண்டாகிறது என்கிறது. இம்மனித சப்தப் பிரபஞ்சம் தொப்புள்கொடி வழியாகச் சென்று மனிதப் பிண்டத்திற்கு மனதை உண்டாக்குகிறது. பின் ஆத்மாவின் வினைக்கேற்ப பிறப்பும், அதைத் தொடர்ந்து ஆயுளும், பின் மரணமும் அடைகின்றது.
இப்படித் தான் தேடி அடையும் உடலுக்குரிய மனிதனுக்கு இது சுலபத்தில் புலப்படுவதில்லை. ஆனால், உடம்பை அதன் போக்கில் போகவிடாமல் அடக்கி ஆண்டால் புலப்பட்டே தீரும். உடம்பு இந்திரியப் போக்கு உடையது. ஆகவே ஆசையை விடுத்து புலன்களை அடக்கிட உடம்பு அடங்கும்.
அதாவது:
இந்திரியத்தை விட ஆத்மநோக்கம் பெரியது
ஆத்ம நோக்கத்தை விட மனமும்
மனதை விட புத்தியும்
புத்தியை விட ஹிரண்ய கர்ப்பம் எனும் கருக்கொள்ளலும்
கருக்கொள்ளலை விட மாயையும்
மாயையை விட ஆத்மாவும் பெரியது
என்றால் ஆத்மாவை அறிய முதலில் இந்திரியப் போக்கைக் கட்டிப்போட்டு உடம்பை வெல்ல வேண்டும். பின் புறத்தே நோக்காமல் அகத்தே நோக்க வேண்டும். அப்படி நோக்க முனையும் போது புத்தி பலவித சந்தேகங்களை எழுப்பி நம்மை நோக்கவிடாமல் செய்யும். எனவே வைராக்கியமான புத்தியை அடக்கி, பின் அழியும் இன்பங்களையே தருகின்ற மாயையைப் பொருட்படுத்தாது தியானித்தால்தான் ஆத்மா புலப்படும்.
இவ்வழியில் தியானிப்பதற்கு ஒரு மந்திரம் வேண்டும். அதுவே சப்தப் பிரபஞ்சத்தின் முதல் மூல எழுத்தான 'ஓம்' என்னும் பிரணவம் ஆகும். இதனைத் தியானிக்கத் தியானிக்கச் சுவாசம் சீராகும். பின் அந்தப் பிரணவ சப்தமும் ஓங்கி, ஸ்தூல குகைக்குள் (ஹ்ருதய குகைக்குள்) கட்டைவிரல் அளவு ஒரு வெளிச்சத்தைப் பார்க்கலாம். அதுவே உன் ஜீவாத்மா.
இதனை உடம்புக்குள் இருக்கும் போது தியானத்தால் மட்டுமே காண முடியும். உடல் சிதையும் போது இது வெளியேறும். இவ்வாறு இது வெளியேறிட நாடிகள் உதவும். உடலில் நூற்றுக்கு மேல் நாடிகள் உள்ளன. இதில் ஒரு நாடிதான் உச்சி நோக்கிச் செல்வது. இதன் வழியாக ஆத்மா வெளியேறினால் முக்தி; மற்ற எந்த வழியில் வெளியேறினாலும் திரும்பவும் பிறக்க வேண்டும். அந்த ஆத்மா தன் வினைக்குரிய கருப்பிண்டத்தைத் தேடிச் சென்று அடைந்துவிடும்.
இப்படிப்பட்ட ஜீவாத்மாவைப் பூமியில் அவதரித்ததும் ஒரு சிறு நேரம் உச்சித் தலையில் துடிப்பதைக் காணலாம். பின் அது முதுகுத்தண்டு வழியே கீழ் இறங்கி மூலாதாரத்தில் சென்று தங்கியிருந்து, உயிரணுக்களான விந்து, முட்டை ஆகியவை உடலில் இருந்து உயிர் வெளியேறும் வரை ஆண், பெண்களிடம் இருந்து வெளியேற்றிக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட உயிரின் கட்டுப்பாட்டில்தான் உடல் இருக்கிறது. உடலில் மறைமுகமாக இருந்து உலக உயிரினங்கள் சகலத்தையும் ஆட்டுவிக்கிறது.
இதன் அடிப்படையில் பூலோகவாசிகளின் பழக்கம் ஒன்றைச் சொல்வது, பின் மறுப்பது, வேறொன்றைச் சொல்வது (அதாவது வாக்கு மாறுவது). அப்படிப்பட்ட உயிரின் நிர்வாகியாகிய எமதர்மனின் நிர்வாக உலகில் என்ன தண்டனை தெரியுமா? அவர்களது நாக்கை வெட்டி எண்ணெயில் பொரித்து அவர்களையே உண்ணச் செய்வது. இதுவே எமதர்ம நிர்வாகம்.
ஒருவர் பூலோகத்தில் பிறக்கும் போது தன் முற்பிறப்பு பற்றியும், பாவ புண்ணியங்கள் பற்றியும் அறிந்து பிறக்கிறானா? இல்லை, தெரியாமல்தான் பிறக்கிறான். அப்படி இருக்க இதுபோல் தண்டிக்கப்பட்டதெல்லாம் நினைவில் இருக்குமா? இல்லை. எனவே எமதர்ம தண்டனைகளினால் என்ன பயன் எனில், நேரடியாகப் பயன் இல்லை எனினும் மறைமுகமாகப் பயன் உண்டு. சொர்க்கத்தில் மகிழ்ச்சி, நரகத்தில் தண்டனை என்று இருந்தாலே மனிதர்கள் பாவம் செய்ய அஞ்சுவார்கள். தண்டிக்கப்பட்டது நினைவில் இருந்தால் மனிதன் மாயையை வென்று சந்நியாசி போல் ஆகிவிடுவான். உலக வாழ்வு இப்போது இருக்கிற மாதிரி இருக்காது.
மனிதர்களில் பாவியே அதிகம் உள்ளனர். ஆயிரத்தில் ஒருவன்தான் சொர்க்கம் செல்கிறான். அதுவும் மோட்சத்திற்கு எப்போதாவது ஒருவன்தான் செல்கிறான். மோட்சம் என்பது மீண்டும் பிறவா நிலை. மோட்சம் செல்ல என்ன வழி என்றால் அது சொல்லித் தெரிவதில்லை, முயன்றுதான் தெரிந்துகொள்ள வேண்டும். இதுவே ஆத்ம ரகசியம்.
இது மனிதனுடைய கருத்தாகக் கூறவேண்டுமானால், ஆத்மாவே ஒருவனைத் தேர்வு செய்கிறது. அது விரும்பினாலே ஒருவனால் மட்டுமே அதை அறிய முடிகிறது. அதற்கு நற்கருமங்களின் துணை பெரிதும் தேவைப்படுகிறது; தியாகங்களும் துணை நிற்கின்றன. எமன் என்றால் உயிர் விழுங்கி என்று சிந்திப்பார்கள். ஆனால் எமன் உயிர் தத்துவத்தை விளக்குபவன்.
இவ்வாறாக எமன் என்றால் எல்லோருக்கும் பயம் உண்டு. ஆனால் அந்த எமனையே வியக்க வைத்துச் சிலிர்க்க வைத்தவன் ஒரு சிறுவனே; அவனே நசிகேதன். தந்தை வாஜஸ்ரவஸ் முனிவர் நடத்திய யாகத்தில் தானமாக இடப்பட்டு, எமனின் பிரசாத உயிராக எமனின் வாசலில் போய் நின்றவன். அவனே, "என்னிடம் இருந்து ஆத்ம ரகசியத்தை அறிந்து, எமனின் பாசக்கயிற்றில் சிக்காமல் ஞானப் பாசத்தில் சிக்கி பாடமும் கற்று, அத்துடன் எமனின் நிலைமையை உலகிற்கு உன் மூலம் விளக்கியதற்காக உமக்கு நான் கடமைப்பட்டவன்" என்ற எமனின் கருத்தையும் பெற்றதுடன், பின் ஆத்மாவைத் தன் ஹ்ருதயக் குகையில் கண்டு தெளியும் வரை ஓயவில்லை.
அன்பார்ந்த மானிடமே, மதங்கள் வாழ்க்கைக்கான வழிகாட்டியே தவிர ஆவேசத்திற்கு உரியவை அல்ல. அனைத்து மதங்களும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்கின்றன. மானிட வர்க்கத்தின் நலனுக்காகப் பல விடயங்கள் ஜோதிடத்தில் மறைக்கப்பட்டது போன்று, வாழ்க்கைக்கான வழிகாட்டியான மதங்களின் நூல்களிலும் மறைக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
தங்கராசா உதயராசா, நாகதம்பிரான் கோவில் வீதி, பெரியகல்லாறு-01, கல்லாறு.
சிவ அகோரிக் குகை, இமயம், இந்தியா: இக்குகைக்குள் உள்ளவை சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வர சுயம்பு வடிவம், பார்வதியின் சுயம்புநிலை, பார்வதியுடன் இணைந்து கணபதி முருகன் சுயம்பு நிலை, அனுமான் மூலிகை மலையைத் தூக்கியவாறுள்ள சுயம்புநிலை, இராமர் இலங்கை வரும் பொழுது செய்த பாலம், லிங்கம், ஆதிசேஷன் மலையைத் தாங்கிய சுயம்புநிலை, கிருஷ்ணர் பர்வத மலையைத் தாங்கிய சுயம்புநிலை; இவற்றிற்கெல்லாம் மேலாக கங்காதேவி அந்த மலையிலிருந்து சொட்டுச் சொட்டாக அவர்களைக் குளிரவைக்கும் நிலை என்பவைதான் அந்த குகையில் இயல்பாக அமைந்திருக்கின்றன. இதுவே சிவ அகோரிகள் தத்துவமாகும்.
இவ் ஆத்ம இரகசியத்தை எழுதியவர்: தங்கராசா உதயராசா