மட்டக்களப்பு பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா உதயராசா அவர்கள் 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், உதயராசா துஷானாத் அவர்களின் பாசமிகு தந்தை ஆவார்.
உறங்காத உள்ளமொன்று உணர்வோடு போராடி உறைவிடம் தேடியிங்கே
உயிர் மடி சேர்ந்ததெங்கே? அலையலையாய் காரணங்கள் ஆயிரமாய்
குவிந்தாலும் காலனவன் கவர்ந்திட்ட உங்கள் இன்னுயிரை மீட்டிடுமோ?
பற்றோடு பாசமதை நட்போடு பகிர்ந்தளித்து மெய்யான அன்பதனில்
எல்லோர்க்கும் இரங்கி நின்றாய்! பொய்யான வாழ்வென்று புறப்பட்டு போனதெங்கே?
கடிமனம் உருகுதப்பா! கண்ணில் நீர் பெருகுதப்பா!
எண்ணம்தான் இறைஞ்சுதப்பா! உங்கள் ஆத்ம சாந்தி திண்ணமப்பா!
உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாசமனங்களில்
நிரந்தரமானது உறவுகளை அன்பால் இறுக்கிக் கொண்டவனே
ஆண்டவன் பாதங்கள் மட்டுமல்ல எம் இதயங்களும் என்றென்றும்
உங்கள் ஆத்மாவின் இருப்பிடம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447366390561