![](https://cdn.lankasririp.com/memorial/notice/200869/9664aeb7-6960-49d4-8b24-d23e342d1c14/21-606407fb7a013.webp)
இரங்கல் செய்தி அமரர் தங்கமுத்து கந்தசாமி எனக்கும் என் மனைவியாரிற்கும் தாய் ஸ்தானத்தில் இருந்து, என் மனைவியின் மகப்பேற்று காலத்தில் தன் மகளைப் போலவும், எம் மகனின் முதலாவது பிறந்த தினத்தினை தம் பேரனின் பிறந்த தினம் போல அனைத்தினையும் முன்னின்று செய்த சிவமதி அம்மாவின் தாயார் மற்றும் எனது உடன் பிறவா சகோதரர்கள் சுகந்தன், சுதர்ஸன், சுரேசன், சுபாங்கன் ஆகியோரின் பேர்த்தியுமான அமரர் தங்கமுத்து கந்தசாமி அம்மையாரிற்கு பேரப்பிள்ளைகள் போன்றே நாமும் அன்போடு உறவாடினோம். அம்மையாரின் பிரிவானது அனைவரிற்கும் துயரமானதே, இருப்பினும் வாழ்வின் நியதிகளை புரிந்து நாம் நம்மை தேற்றுதல் வேண்டும். அம்மையாரின் பிரிவால் துயருற்ற குடும்பத்தினர்க்கு எம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி துயரில் பங்கெடுக்கும், விதுரன், ஷிமாறி, சேரன் மற்றும்
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/flower3.png)