Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 12 AUG 1936
மறைவு 22 FEB 2026
திருமதி தங்கம்மா வைரமுத்து
வயது 89
திருமதி தங்கம்மா வைரமுத்து 1936 - 2026 கோப்பாய், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா வைரமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து..
இன்றுடன் முப்பதொரு நாட்கள் முடிந்தாலும்! 
எமது குடும்பக்கோவிலின் குலவிளக்காய்!

எங்கள் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் 
உறுதுணையாய்! உற்றவர்க்கும், 
மற்றவர்க்கும் உறுதுணையாய்!

எம் வாழ்வின் ஒளியாய் மகிழ்வாய்
 மகிமையாய் நீ வாழ்ந்தாய் அம்மா! 
அன்புக்கும், பண்புக்கும் பொக்கிஷமாய்!

அன்பு நெஞ்சங்களில் அகலா இடம்பிடித்து!
 வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து!
 எம்மையும் வாழவைத்து! 
வானுறையும் எமது தெய்வத்தின்
 இனிய நினைவுகளை எங்களின் 
உதிரங்களில் சுமந்த வண்ணம் 
இம் மலரை உங்கள் பாதக்கமலங்களில்
 அர்ப்பணிக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 23 Feb, 2026