![](https://cdn.lankasririp.com/memorial/notice/212679/5a63d2d4-919e-41d0-aad2-dbee38b26f00/23-64214320ed486.webp)
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/lamp.png)
எங்கள் பாசத்திற்கும் மதிப்பிற்குமுரிய பெரியம்மாவின் மறைவினால் ஆறாத்துயரம் அடைந்துள்ளோம். பெரியம்மா நீங்கள் எங்கள் மீது காட்டிய அளவற்ற பாசத்தை என்றுமே மறக்க முடியாது. நாங்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் எங்கள் அருகில் இருக்கும் உணர்வுடனேயே வாழ்ந்தோம் . நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது எமக்கு பிடித்த கொழுக்கட்டை போன்ற தின்பண்டங்களை எல்லாம் பிரியமுடன் செய்து எமக்குதந்தமை பற்றியெல்லாம் நினைவலைகள் புரண்டோடுகின்றன. நீங்கள் எமக்குப் பெரியம்மாவாகக் கிடைத்தமை நாம் பெற்ற பெரும் பேறாகவே எண்ணுகிறோம். நீங்கள் இறைவனடி சேர்ந்தமை பற்றி அறிந்ததும் மனமுடைந்து போனோம். பிள்ளைகள் எல்லோருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நேர்த்தியாக அவ்வப்போது செய்தீர்கள் பெரியம்மா. உங்கள் நினைவலைகளில் கண்ணீர் மல்க நிற்கின்றோம். உங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்.
Our deepest condolence for your lost .Rest in peace.