1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தனஸ்லேகா லிங்கேஸ்வரன்
வயது 51
Tribute
28
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney, சுவிஸ் Thun ஆகிய இடங்களைப் வசிப்பிடமாகவும் கொண்ட தனஸ்லேகா லிங்கேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வானத்தில் நிலவாய் வையகத்தில் தென்றலாய்
எங்கள் இதயத்தில் என்றென்றும் வாழும் தாயே
நாம் வாழும் வரை உங்கள் நினைவுகள்
எம்முடன் வாழும்
அன்பு என்னும் அறிவை
எமக்கு ஊட்டி வளர்த்த அம்மாவே
உங்களை இழந்தோம் என்பதை
எம் மனம் ஏற்க மறுக்கிறது
மரணம் என்பது இயற்கைதான்
அதை ஏற்பது மனித இயல்புதான்
ஏனோ இதயம் வலிக்கிறது
அது ஏனென்று புரியவில்லையம்மா!
ஐயிரண்டு திங்கள் சுமந்து
அங்கமெல்லாம் நொந்து எம்மை பெற்றெடுத்த தாயே
உங்கள் நினைவுகள் எங்கள் உள்ளத்தில்
அணையாத தீபமம்மா!
கண்ணீர் நிறைந்த வலியோடும்
கனத்த மனதோடும்
தாயே உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
I was saddened to hear that the beautiful person left us . My thoughts are with you and your family. Your child hood memories always be with us, Rest in Peace 🤗🙏😘💕