Clicky

பிறப்பு 15 FEB 1939
இறப்பு 08 JUN 2026
திருமதி தனபதிஅம்மாள் பாலசுப்பிரமணியம் (Bala Teacher, Mahajana College)
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி- பழைய மாணவி, இளைப்பாறிய ஆசிரியர்
வயது 87
திருமதி தனபதிஅம்மாள் பாலசுப்பிரமணியம் 1939 - 2026 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Thanapathiammal Balasubramaniam
1939 - 2026

காலங்கள் பல கடந்திருந்தாலும் கனிவான நினைவுகள் கண்ணுக்குள் நிற்கின்றன. கம்பீரமான நடை. நிகரற்ற உதவும் மனப்பான்மை. மாகாஜனாவின் பீரி ரீச்சர் மல்லாகத்தில் அறிமுகமான பாலா ரீச்சர். மாசற்ற சகோதர பாசம் இணைபிரியாமல் இரண்டு குடும்பத்தையும் இணைத்து வைத்திருக்கின்றது. எங்கள் வீட்டு மகனை உங்கள் மகன் ஆக பார்த்து மகிழ்வடைந்தீர்கள். உங்கள் உறவுப்பிள்ளையை எங்கள் குடும்பத்தில் திருமணமும் செய்துவைத்து இருவீட்டு உறவையும் இணைத்தீர்கள். இடம்விட்டு இடம்பெயர்ந்தாலும் இணைபிரியாத உறவு இது. இலண்டனில் இருந்து நீங்களும் அங்கிளும் நோர்வேக்கு வந்து நின்ற நாட்கள் இனிய நாட்கள். இப்பொழுது நீங்கள் ஆண்டவன்மடியில். அங்கிளுக்கும் எங்கள் பெற்றோருக்கும் அருகில். உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்துக்கின்றோம்🙏. உங்கள் பிரிவால் துயரடையும் ஜெகதாஸ் ( சிறீ ), கருணா, ரவி , சுபா குடும்பங்கள்❤️🙏 🙏🙏

Write Tribute

Tributes