ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவு கொண்டு குடும்பம் உறவுகள் வீழ்ந்துவிடாதிருக்க வேரென இருந்தீர்கள். மாயப் புயல்வடிவில், காலனவன் இன்னுயிர் பறிக்க சோகத்தை தந்துவிட்டு சொல்லாமல் சென்றதென்ன . காலனவன் கணக்கில் தப்பென்று சொல்லுவதா கண்களை குளமாக்க விதி செய்த விளையாட்டா பிள்ளைகள் கதறியழ உற்றார் உறவுகள் சோகத்தில் துடிதுடிக்க சொல்லாமல் சென்றதேனோ ஆசை அம்மா எம் மேல் பாசத்தை காட்டி வந்தீர்கள். உங்களை சட்டேன்று இழந்து விட்டோம். இனி எப்போ காண்போமோ. ஓவியமாய் பதிந்திருக்கிறது உங்கள் முகம் காவியமாய் வாழ்ந்தீர்கள் உங்களை காலமெல்லாம் நினைத்திருப்போம் தேனினியா உங்கள் குணம் தேடி நாம் உருகுகிறோம். ஆண்டவன் காலடியில் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்...ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி