யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், தொல்புரம் மற்றும் கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனலெட்சுமி சிவபாக்கியநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் 31 ஆனதுவோ
அம்மா நீங்கள் மறைந்து
ஆறுமோ வெந்துயர்
அன்பு அம்மாவே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
எத்தனை நாட்கள் சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதயதுடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அம்மா!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.