யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனலட்சுமி சிவநாயகமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் அணையாத தீபமேன
எண்ணி இருந்த எமதன்புத் தெய்வமே ஆரூயிர் அன்னையே
எங்கள் பாசத்தின் திருவுருவே “அம்மா”
குடும்ப குல விளக்கு மறைந்து ஆண்டொன்று ஆனதே!
துணையாய் இருந்து அப்பாவுக்கும் எமக்கும் ஆறுதல் அளித்தீர்
கண்ணின் இமையாய் காத்து நின்றீர்
உடம்பில் உணர்வாய் கலந்து இருந்தீர்
கண்கள் தவிக்க நெஞ்சம் துடிக்க மறைந்து சென்றாய் ஏனம்மா!
நீ அன்புடன் பேசும் பேச்சு
உன் இரக்கம் கொண்ட உள்ளம்
கணிவுறும் உந்தன் எண்ணம்
நீ எம்மருகில் இருக்கையில் துணிவாக நின்றிருந்தோம்
இன்று தாலாட்ட நீ இல்லை தவிக்கின்றோம் தாயே!
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே! வாழ்ந்த நாட்களை வசந்தமாக்கிச் சென்ற
எம் அன்னையின் இழப்பு உறவுகளையும்
எம் உள்ளத்தையும் விழியோரம் நீர் சொரிய வைக்கின்றதேயம்மா!
அகிலத்தில் ஏது இணை உனக்கு அம்மா
இணையில்லா தெய்வமே எம் தாயே
அருகிலிருந்து ஆறுதல் கூற மீண்டும் வரமாட்டீரோ?
மறுபிறவி எடுத்து மண்ணில் வந்து
மீண்டும் எங்களுடன் சேர்வாயா அம்மா!
கரம்பிடித்த நாள் முதல் இறுதிவரை
இணைபிரியா வாழ்வதனை வாழ்ந்தோம் யான் அறியேன்
இறுதியில் சிரித்துப்பேசி எனை ஏமாற்றிச் சென்றதேனோ..?
இருந்த இடம் தேடி தினம் புலம்புகின்றேன்..
ஆசையாய் நேசமாய் வளர்த்த பிள்ளைகளும்
பாசமாய் பண்புடன் வளர்த்த பேரப்பிள்ளைகளும்
மருமக்களும் சகோதரர்களும் சகோதரிகளும்
உன்னை இழந்து தவிக்கின்றனர் தினந்தோறும்!
நீங்கள் விண்ணுலகில் வாழ்ந்தாலும்
மனதாலும் நினைவாலும் தினம் தினம் துதிக்கின்றோம்
காலங்கள் விடைபெறலாம் கண் முன்னே நிழலாடும்
உங்கள் உருவம் எம் இதயத்தில்
கலந்து நிலைத்திருக்கும்
ஆண்டொன்று கடந்தாலும் அம்மா
உன் இன்முகமும் புன்சிரிப்பும்
எம் மனதை விட்டகலவில்லை அம்மா!
உங்கள் ஆன்மா நெடுந்தீவு மேற்கு நெழுவினி விநாயகர் திருவடி நிழலில் சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்...
Deepest sympathy