Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 DEC 1943
இறப்பு 03 JUL 2019
அமரர் தனலெட்சுமி சண்முகநாதன் 1943 - 2019 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனலெட்சுமி சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

தலை நகரில் வீற்றிருந்த தாயே! உனைத் - திரு
மலை நகரில் ஆட்சி செய்யும் தாயழைத்தாளோ?
கலை அழகே! விலையிலாப் பெருஞ் செல்வமே!
அலை கடலில் படகைப் போல் தத்தளிக்கின்றோம்
உலைக் களத்தில் நெருப்பனெவே தினம் தகிக்கின்றோம்
நிலை இல்லா வாழ்வில் ஆண்டொன்றின் நினை
வலைகள் வந்து நெஞ்சக் கரையில் மோதுதம்மா!

பொய்யாயின வெல்லாம் போயகல எங்கள்
ஐயாவின் வழித்தடம் பற்றிச் சென்றிருப்பாய் நீயே!
மெய்யாகி உயிராகி மூச்சாகி எமை காத்து - இந்த
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த பெருந் தெய்வமே!
உய்ய வழி காட்டி ஒளிச்சுடர் தந்து ஓங்க வைத்தாயே!
பெய்யாதோ மாமழையும் பெய்திடுமே! அம்மா நீ சொன்னால்
ஐயோ! தாயே! ஆண்டொன்று ஆகியும் துயரமது ஆறலையே!

நாளும் பொழுதும் எமையாளும் அன்புத் தாயே!
வாழுங் காலம் யாவும் உன் நினைவோடு வாழ்வோமே!
கோளுங் கொடுங் கூற்றும் எமை அண்டாது காத்தவளே!
பாழுங் காலக் கடலில் தெப்பமென வந்து நிற்பாய்!
சூழும் வினைகள் எமைச் சூழாது காத்து நின்று
மீளும் வழி காட்டி மேன்மையுற ஏற்றி வைப்பாய்!
நாம் மாளும் காலம் வரை தப்பாது ஓடி வரும் உன் நினைவலைகள். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

நினைவகலா நினைவுகளுடன், மக்கள், மருமக்கள், பேரமக்கள்..

தகவல்: குடும்பத்தினர்