

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட தனலெட்சுமி சண்முகநாதன் அவர்கள் 03-07-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன்(கிருஷ்ணன் கொம்பனி- திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
காஞ்சனமாலா(நெதர்லாந்து), வசந்தகுமார்(சுவிஸ்- பேர்ண்), ரஞ்சனமாலா(சுவிஸ்- பீல்), வசந்தமாலா(சுவிஸ்- லுசேர்ண்), ரத்தினமாலா(சுவிஸ்- லுசேர்ண்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மராஜா, விஸ்வலிங்கம், இராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்படக்ஷன்(நெதர்லாந்து), மேகலா(சுவிஸ்- பேர்ண்), பாஸ்கரன்(சுவிஸ்- பீல்), சதானந்தன்(சுவிஸ்- லுசேர்ண்), சாந்தகுமார்(சுவிஸ்- லுசேர்ண்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தனலெட்சுமி, தங்கராணி, மாசிலாமணி, காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், தியாகராஜா, குமாரசாமி, பாக்கியலெட்சுமி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டனிஷா, பிரனாஸ், அஷ்வினா, டிஷாங்கி, டிலக்ஷி, மோணிஷா, இஷாலினி, அபினாஷ், ஷர்னிக்கா, கோபிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Life takes from us only lives we were given by it. Rest in peace