மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறையை வதிவிடமாகவும், டென்மார்க் Middelfart ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த தனலட்சுமி விநாயகமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி தேதி: 23-09-2026
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…
மாதங்கள் பல சென்றாலும்
வலிகள் நகரவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
உங்களை நாங்கள் மறக்கவில்லை!
இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாய்க்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை எத்தனை ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...