திதி: 20-10-2024
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 3ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் இராமலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் நெஞ்சங்களில்
நிறைந்து நிற்கும் அப்பாவே
எங்களுடன் இன்னும் சிலகாலம்
இருந்திருப்பீர்கள் என நினைத்திருந்தோம்.
காலன் அவன் கடுகதியில் வந்து
ஒருவருக்கும் தெரியாமல் களவாகக்
கொண்டு சென்று விட்டானே!
அன்றைய தினத்தை நினைக்கும்போது
எல்லோருடைய நெஞ்சமும் பதறுகிறது,
எங்கள் சுமைகளை எல்லாம்
இமைகள் போல காத்தீர்கள் அப்பா.
உதிர்ந்து நீங்கள் போனாலும் உருக்கும்
உங்கள் நினைவுகள் உள்ளத்தில்
என்றும் உறைந்திருக்கும்.
உங்கள் பிறந்த நாளில் எல்லோரையும்
சந்தித்து கொண்டாடி மகிழ்ந்தீர்கள்
ஒரு சில மாதங்கள் கடப்பதற்கிடையில்
ஆறாத வலியையும் சுமக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அவரது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் நடைபெறும்.
My deepest condolences to his family.