யாழ். பத்தமேனி விமான நிலைய வீதி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பாசல்லான்ட் Hölstein ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் கமலாதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 09/05/2026
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள்.