யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் அன்னலட்சுமி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளாவில் சாட்டி கடற்கரையில் நடைபெற்று வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 01-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறவிருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
புளியங்கூடல் வடக்கு,
ஊர்காவற்துறை.