நெடுங்கேணி மன்னவனே நெடுந்தூரம் வழிநடந்தாய் நெடுஞ்சாலை வழியாக நிநடந்த பாதைகளம் நீளமையா நெடுங்கோடு போட்டுத்தான் குமுளமுனை மருகனானாய் நெடும்பயணம் சென்றனையோ உன்னவளைத் தவிக்கவிட்டு பரமன் பதம்தேடிப் போவதற்கோ பரமலிங்கம் நீ சென்றாய் பரமனின் அருள்பெற்று உறவுகளின் விடைபெறவோ பரமனே நீ இறுதிப் பயணம் சென்று அன்புடனே விடை பரமலிங்கம் நீமித்த இடத்துப் புல்லும் சாகாதே தூயவனே! அன்பின் ஊற்றாக அகமகிழ்வாய் கிராமசேவையாளனாய் அன்போடு பணிதந்து அனைவரும் ஒன்றெனவே அன்புமுகம் தந்து அணைத்திருந்தாய் பரமலிங்கமே அன்புமுகம் காணது உன்னவரை ஏங்கவைத்ததேனையா? இன்பப் புதையல் எனப் பிள்ளைகளை வளர்த்து இன்பான மனையாளும் இனிதுறவே சோதரரும் இன்போடு இயைந்திருக்க இவ்வுலகு நீங்கிப் பேர் இன்பவீட்டுக்க விரைந்தனை அமைதிகொள் அன்பனே! புன்முறுவல் மாறா இன்முகுத்துத் தயாபரனே உன் புன்னகைதான் நெஞ்சில் நிழலாடுதையா புன்னகையின் மன்னவனே உன்புன்னகைப் புண்ணியத்தை இனிக் காண்பதெங்கே ஐயா! நெடுங்கேணி கந்தசாமி ஆலயத்து கந்தனவன் நினைவாக கந்தசட்டி முடிவினிலே அழைத்தனன் தன்னடியில் அமைதிகொள் அன்பனே. ஒட்டுசுட்டான் தான்தோன்றி உனை அணைப்பார் சிவகுருநாதனாய் என்பதில் ஐயமில்லை. இறைபதத்தில் சாந்தி கிட்டட்டும். குடும்பத் தலைவனை இழந்து தவிக்கும் அன்புச் ககோதரி கோகிலாதேவியினதும் பிள்ளைகள். சகோதரர் மற்றும் உறவினர்களின் துயரிலர் பங்குகொள்ளவதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக. த.சிவபாலு (குமுளமுனை)