

யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Aurora வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிரிசாந்தி தாமோதரம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதம்மா
ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
விண்ணுலகில் வாழ்ந்திடினும் நினைவுகளால்
எம் மனதில் வாழ்கின்ற எம் குல விளக்கே!
தெய்வமே! பண்ணிய பாவமென்ன
உங்களைப் பறி கொடுத்துத் தவிக்கின்றோம்
பிரிவு என்னும் தண்டனையால்
நிதமும் நிம்மதி இழந்து துடிக்கின்றோம்
மனிதத் துயரங்களுக்குள் அடங்காத துயரமிது
மீட்சி பெற முடியாத சோகமிது
நீங்கள் தொடுவானத்தின் மின்னலல்ல
எம் இதய வான் பரப்பில் ஒளி வீசும்
துருவ நட்சத்திரம் நீங்கள்
வர மாட்டீர்கள் எனத் தெரிந்தும் சுமக்கின்றோம்,
சுமப்போம் உங்கள் நினைவுகளை
எம் இதயப் பெட்டகத்தில்
அடுத்த ஜென்மம் ஒன்று உண்டெனில்
நீங்கள் எம்முடன் இணைந்திட வேண்டுகின்றோம்
காலங்கள் உருண்டோடினாலும்
எம் எண்ண அலைகள் என்றென்றும்
எதிரொலிக்கும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்திக்காய்
வேண்டி நிற்கும்
குடும்பத்தினர்
Please accept our deepest condolences