

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கண்டியை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை ஜெகதீஸ்வரன் அவர்கள் 22-12-2020 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை(சந்தைக் கடை செல்லத்துரை) தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
ரதிதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை, இலங்கை), கேதீஸ்வரன்(ஓய்வுபெற்ற ஆசிரியர், இலங்கை), சந்திரேஸ்வரன்(கனடா), குலதேவி(கனடா), சறோசாதேவி(ஆசிரியை இலங்கை), குகனேஸ்வரன்(கனடா), உலகேஸ்வரன்(பெல்ஜியம்) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,
ஜீவரட்ணம்(ஓய்வுபெற்ற கிராம சேவகர், இலங்கை), நளாயினி(ஓய்வுபெற்ற ஆசிரியை, இலங்கை), மாலா(கனடா), தர்மசீலன்(கனடா), சோதிராஜா(ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர், இலங்கை), நித்தியகலா(கனடா), கிருஸ்ணகுமாரி(பெல்ஜியம்) ஆகியோரின் ஆசை மைத்துனரும்,
நிரோசினி, சரண்யா, ஹரிசன், பிரார்த்தனன், மதுசனன், டிலுக்சன் ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,
ஹிசோபன், ஜனுசாந்த், வதுசென், மதுசென் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
திசானி, டயானி, பிரியங்கா, சாரங்கா, அருளங்கா, துவாரங்கா, சங்கித் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஆதவ், ஜக்சவி, அரோண், அபிரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற பேரம்பலம், பரமலிங்கம், இலட்சுமணன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
கமலாவதி(கிளி) அவர்களின் அன்புப் பெறாமகனும்,
பிரமளாதேவி(கனடா), யமுனாதேவி(கனடா), கஜேந்திரன்(கனடா), மீனலோஜினி(இலங்கை) ஆகியோரின் உடன் பிறவாச் சதோதரரும்,
காலஞ்சென்றவர்களான துரையப்பா, பொன்னம்பலம் ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லக்கண்டு, இலட்சுமி, முத்துப்பிள்ளை ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை இல. 5 வள்ளுவர் கோட்டம், பெரிய குளம், திருகோணமலையில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கேட்டுக்கொள்கின்றோம்
Socked and saddened to hear that Jega, our friend, is no more. Our heart felt condolences to family and friends. Shan Civil Engineer Parallel batchmate of University of Peradeniya.