அன்பு நண்பனே உனது திடீரான இழப்பு கொடுரமாக இருக்கிறதே! 1974 ஆண்டில், பதினொரு வயதிலே அறிமுகமானோம், பழகினோம். 1987 ஆண்டிலிருந்து அதை மேலும் வலுப்படுத்தி கொண்டோம் . Torontoவில், நாமிருவரும் roommateஆக சிலவருடங்கள் இருந்துகொண்டோம். நான் London குடிபெயர்ந்து போனாலும், நீ மாதம் ஒரு முறையென்றாலும் தொலைபேசில் அழைத்துக்கொள்வாயே. ஒவ்வருமுறையும் நான் Toronto வரும்போது எல்லாம் சந்தித்துக்கொள்வோமே! உனது தொலைபேசி அமைதியாக போனதை நினைத்து கவலைப்பட்டு, உன்டோடு கடைசியாக இந்த சனிக்கிழமை தானே கதைதேன். அதுக்குள் அவரசமாக புறப்பட்டுவிடாய் செல்வனை! வெளிநாட்டில் நண்பர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் நீ உனது வெள்ளை மனத்தால் பலர் நண்பர்களை கவர்ந்தாயே. உனது ஆத்மா சாந்தியடைய நல்லூர் கந்தனை பிராத்திக்கிறோம் !!! ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி