

அன்பு அப்பா, இந்த உலகத்தில் ஒரு நல்ல மனிதனாக வாழ்வதற்குரிய நல்ல குணங்களான உண்மை, நேர்மை, நியாயம் என்பவற்றை எனக்கு உணர்த்தி, மற்றவர்களிடம் எதற்கும் கையேந்தாமல், அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படாமல், சொந்த உழைப்பில் சொந்தக்காலில் தன்மானத்தோடு வாழ வேண்டும் என்று எனக்குநீங்கள் வழிகாட்டினீர்கள். நான் இன்று வரை அப்படியே வாழ்கிறேன். என் இறுதி வரையும் இது தொடரும். உங்களைப் போல் நான் இப்படி வாழ்வதால் உங்களுக்கு அது பெருமையான விஷயமாக ஒரு பிள்ளையாய் திருப்தியடைகிறேன். இதுவரையும் நான் உங்கள் மனசை நோகடிக்கவில்லை அப்பா. ஆனால் மனசு தவிக்கிறது நீங்கள் இல்லாமல். நெஞ்சு வெடிக்குது நீங்கள் இல்லையென்பதைநினைக்க. ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு, ஆற்ற முடியவில்லை என் மனதை, ஆறுதல் படுத்திக் கொண்டு எழுதுகிறேன்... உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ❤️I miss you அப்பா❤️ ❤️உங்கள் அன்பு மகன் ரஞ்ஜித்❤️
Rest in Peace