1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 14 JUL 1939
விண்ணில் 29 SEP 2020
அமரர் தம்பு சண்முகநாதன் 1939 - 2020 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கண்ணகைபுரம் 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பு சண்முகநாதன்  அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!

அன்போடு பண்பையும்
பாசத்தையும் எம்முள் விதைத்து
எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு.

ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
உங்கள் அன்பு முகமும், உங்களது பாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்