
யாழ். நீர்வேலி மேற்கு மாசிவனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பு இராசதுரை அவர்கள் 13-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சீதேவன்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,
அருளம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
கோபிகா(கனடா), ஸ்ரீராகவன்(லண்டன்), தர்சிகா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காண்டீபன், பிறின்சி, இராஜகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, அன்னம்மா, இரத்தினம், பாக்கியம், தங்கம்மா, நடராசா மற்றும் பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனிக்ஷா, அன்ரிகா, காவியன், இலக்கியா, கவின், அபினாஸ், அபிஷேக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி மாசிவன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.