
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் சுருவில், யாழ். கொக்குவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பியப்பா சிதம்பரநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் சிகரமே
வாழ்வின்
ஒளிவிளக்கே
எம்
குடும்பத்தலைவனே!
எம்
வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
காலத்தின் கட்டளையோ- ஐயா
இன்று நீர் கடவுளாகினீர்
அருகில் இருந்தும் பார்க்க
முடியாமல்- நாம்
உமை
அன்றாடம் துதிக்கின்றோம்
அப்பா கலகலப்பாக பேசும்
கனிவான புன்னகையும்
பாசத்துடன் உறவாகும் உங்கள்
அன்பையும்
பல்லாயிரம்
ஆண்டுகள் சென்றாலும்
உங்களை நினைத்து
கண்ணீர் சொரிகின்றோம்...
எத்தனை தான் எமக்கிருந்தாலும்
ஏங்கித் தவிக்கின்றோம்
உனை நினைத்து
எப்படித்தான்
ஐந்தாண்டு சென்றதுவோ
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
எம் நெஞ்சுக்குள் வாழும்
உங்கள் நினைவுகள் எப்போதும்
கலைந்துபோகாது.