Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 23 MAR 1950
உதிர்வு 25 FEB 2023
அமரர் தம்பியப்பா பாக்கியராஜா (ஆச்சாரி)
வயது 72
அமரர் தம்பியப்பா பாக்கியராஜா 1950 - 2023 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மட்டக்களப்பு மகிழூரைப் பிறப்பிடமாகவும், யாழ். நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பியப்பா பாக்கியராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 14-02-2024

கரம்பிடித்த நாள் முதல்
இறுதிவரை இணைபிரியா
வாழ்வதனை வாழ்ந்தோம்
யார் கண் பட்டதுவோ யான் அறியேன்
 சிரித்துப்பேசி எனை ஏமாற்றிச் சென்றதேனோ..?
இருந்த இடம் தேடி தினம் புலம்புகின்றேன்!

ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்பு
முகம் எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!

ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!

உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும்
எமக்காகத் தந்து எங்கள் உயர்வே உங்கள்
ஒரே இலட்சியமாய் கொண்டு வாழ்ந்தீர்கள்
அப்பா!

உங்களுடன் வாழ்ந்த நிமிடங்கள்
எங்கள் வாழ்வில் சுடர் விடும் ஒளியாய் மலர்கின்றன
ஆண்டொன்று ஆனாலும் அழியாத அன்புருவாக- என்றும்!
வாழ்வீர்கள் எங்கள் நெஞ்சங்களில்

என்றும் உங்க்ள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Vethanayagam Family From Sri Lanka.

RIPBOOK Florist
Sri Lanka 1 year ago

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 26 Feb, 2023
நன்றி நவிலல் Mon, 27 Mar, 2023