யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் குறிகாட்டுவானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா மோகனதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எங்களை விட்டு
நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் ஆசைமுகம் எங்கள்
நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த
நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கின்றோம்.
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் எங்களை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்.
என்றும் உங்கள் பிரிவால்
துடிக்கின்றோம் தந்தையே!!
நீர் நிறைந்த விழிகளோடு
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தம்பிஐயா மோகனதாஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 07-02-2022 திங்கட்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துக்கொள்ளுங்கள்.
முகவரி:
சாயி போட்டோ,
1020,
காங்கேசன்துறை வீதி,
நாச்சிமார் கோவிலடி,
யாழ்ப்பாணம்.
I would like to pass on my deepest condolences to you .