யாழ். கரம்பொன் ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை மகேஸ்வரன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
Rest in peace friend, we know you are in a better place and one day we shall meet again