யாழ். கரம்பொன் ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை மகேஸ்வரன் அவர்கள் 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பாரிஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பித்துரை, குணமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மதியாபரணம், பாரபரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தா(வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
டனிசியா, டல்சன், டினேஸ்வரன், டிலக்சஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டிலான் அவர்களின் அன்பு மாமனாரும்,
விக்னேஸ்வரன்(இலங்கை), பாலேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இரத்தினமாலா, குணம்(ஜேர்மனி), வதனா(இலங்கை), மகேஸ்வரி(பிரான்ஸ்), பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற நாகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிலியான், கைலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Rest in peace friend, we know you are in a better place and one day we shall meet again