
திதி : 29-08-2023
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கற்குளம் சாலம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிராசா சிறுபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மனைவி புலம்பல்:
கண்களில் எம்மை சுமர்ந்தீர் கணப்பொழுதில்
எம்மை விட்டு கரைந்து விட்டீர் காற்றில்
இந்த மண்ணில் உன்னை போல் யார் வருவார்
எம்துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்
பிள்ளைகள் புலம்பல்:
காற்றோடு கரைந்தாய் கடைசிமுகம் காட்டாது
அப்பா என நினைத்தாலே
அன்பு முகம் காட்டும் மனதில்
தீராத வடு எமக்கு தந்ததேனோ!
ஆண்டொன்று உங்களை பிரிந்து
அகன்றோடி மறைந்தாலும்
ஆருயிர்த் தந்தையே உங்கள் நினைவுகள்
என்னைத் தாலாட்ட
மீண்டும் மீண்டும் தேடுகின்றேன்
எத்தனை ஆண்டுகள் பல கடந்தாலும்
நாம் இப் பூமியில் வாழும் வரை உன் நினைவுகள்
எம்மை விட்டு அகலாமல் வாட்டி வதைக்கும்மய்யா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
கமலாதேவி(மனைவி), பாலசுரேஸ்(மகன்- லண்டன்)
மலர்விழி(மருமகள்)
கயலினி, கஜானன், கஜானி(பேரப்பிள்ளைகள்).